இசை
காதணியில் இசை இருப்பினும்,
ஒலிபெருக்கிகள் பல இருப்பினும்,
இடியின் சத்தத்தை முரசொலியாகவும்,
மழையின் சாரலை தாழமாகவும்,
மின்னலை மின்னும் ஒளியாகவும்,
குருவிகள் கீச்சிடுவதை பாடல் ஒலியாகவும்
இவ்விசையை ரசித்து ஆடும் மரங்களின் நடுவில்
மெய்மறந்து நின்றேன்.
மொழியற்ற இப்பாடலை
மொழி அறிந்த மனிதர்களிடம்
எப்படி தெரிவிப்பது என்ற கேள்வியில்
இவ்விசை மறைந்தது
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment